ராமேசுவரம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி செலவில் சாலை பணிகள், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்


ராமேசுவரம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி செலவில் சாலை பணிகள், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:00 AM IST (Updated: 27 Aug 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி செலவில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேற்று ராமேசுவரம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரம் நகராட்சி பகுதியில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். தனுஷ்கோடி சாலையில் மணல் மூடுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ராமேசுவரம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறைந்த வாடகையில் அறை எடுத்து தங்கிச்செல்லும் வகையில் பஸ் நிலையம் அருகே யாத்திரை நிவாஸ் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 6 மாதத்தில் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

எஸ்.பி.எ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் ரூ.ஒரு கோடி செலவில் அரங்கம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ராமேசுவரத்தை சேர்ந்த 4 இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவை வழங்கினார். அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுணன், முன்னாள் நகரசபை துணை தலைவர் குணசேகரன், மாவட்ட விவசாய அணி வீரபத்திரன், மீனவரணி மாவட்ட செயலாளர் அருள், தஞ்சி சுரேஷ், முத்துராமலிங்கம், முனியசாமி, அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் சரவணன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.


Next Story