இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற 665 பேர் மீது வழக்கு


இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற 665 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Aug 2018 3:00 AM IST (Updated: 27 Aug 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற 665 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கை,

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், அவவாறு அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதரை ஆகிய உட்கோட்ட பகுதிகளில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 243 பேர் மீதும், பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 665 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story