திருப்பத்தூரில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகிய காவிரி நீர்


திருப்பத்தூரில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகிய காவிரி நீர்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:30 AM IST (Updated: 27 Aug 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஆறுபோல் பெருககெடுத்து ஓடியது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெருவில் கடந்த சில நாட்களாக மேடாக உள்ள பகுதிகளுககு குடிநீர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் சென்று பார்த்தபோது குழாய் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் அதனை சரிசெய்தனர். அதன்பிறகு சமஸ்கான் பள்ளிவாசல் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இருப்பினும் ஊழியர்கள் சென்ற சிறிதுநேரத்தில் அந்த கூட்டுக்குடிநீர் குழாய் வால்வு உடைந்து குடிநீர் வீணாகியது. அதிக அளவில் வீணாகிய தண்ணீர், திருப்பத்தூரில் உள்ள மதுரை ரோட்டில் ஆறு போன்று பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய குடிநீர் முறையாக வேலை பார்ககாததால் வீணாக சாலையில் தேங்கி கழிவுநீர் வாய்ககாலில் கலந்தது. பின்னர் இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிககப்பட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, தண்ணீர் அதிகமாக வந்ததால் குழாயில் உள்ள வால்வு பிடுங்கிககொண்டது. அதனால் தான் தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது. விரைந்து பழுதை சரிசெய்து விடுவோம் என்றார்.


Next Story