மாவட்ட செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம் + "||" + Shiv Sena suspicions about the death of former Prime Minister Vajpayee

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்
பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16–ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மும்பை,

வாஜ்பாய் உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், அவரது இறப்பு தினம் குறித்து சிவசேனா தற்போது சந்தேகம் கிளப்பி இருக்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், இது தொடர்பாக அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, ‘வாஜ்பாய் ஆகஸ்டு 16–ந் தேதி இறந்தார். ஆனால் 12 மற்றும் 13–ந் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16–ந் தேதி இந்த உலகை விட்டு சென்றுள்ளார் அல்லது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் வாஜ்பாயின் மரண தினம் குறித்து மறைமுகமாக சிவசேனா சந்தேகம் கிளப்பி இருக்கிறது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவே வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் விவகாரம் நீங்கள் மோடி அரசை கவிழ்க்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிவசேனா கேள்வி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நீங்கள் மோடி அரசை கவிழ்க்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சிவசேனா கேள்வியை எழுப்பியுள்ளது.
2. ராமர் கோவில் வாக்குறுதி பொய்யானால் 2 இடங்கள்தான் கிடைக்கும் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை
ராமர் கோவில் வாக்குறுதி பொய்யானால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 2 இடங்கள் தான் கிடைக்கும் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் முறையாக முதியவர் உடல் தானம்
புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் முறையாக முதியவர் உடல் தானம் செய்யப்பட்டது.
4. ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அனுமதி பெறவேண்டும்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அனுமதி பெறவேண்டும் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
5. “போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல்” சிவசேனா கடும் தாக்கு
“போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல்” என சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.