நவம்பர் மாதம் நடக்கிறது : 1,000 மகாடா வீடுகளுக்கான குலுக்கல்


நவம்பர் மாதம் நடக்கிறது : 1,000 மகாடா வீடுகளுக்கான குலுக்கல்
x
தினத்தந்தி 27 Aug 2018 5:21 AM IST (Updated: 27 Aug 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

வரும் நவம்பர் மாதம் 1,000 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடைபெறும் என மாநில வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள ரங்கு சாரதா அரங்கில் நேற்று முன் தினம் 9 ஆயிரத்து 18 மகாடா வீடுகளுக்கான குலுக்கல் நடந்தது. இந்த குலுக்கலில் மகாடா சார்பில் கட்டப்பட்ட 9 ஆயிரத்து 18 வீடுகளுக்கான பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

விழா முடிந்ததும் மாநில வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில் மகாடா சார்பில் காட்கோபர், விக்ரோலி, மான்கூர்டு, வடலா, சயான், போரிவிலி, கோரேகாவ், முல்லுண்டு ஆகிய இடங்களில் சுமார் 1,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளுக்கான குலுக்கல் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை காலத்தில் நடைபெறும்.

அடுத்த மாதம் இந்த வீடுகளுக்காக பொதுமக்கள் மகாடாவில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story