மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் நாகம்பாறைவிளையை சேர்ந்தவர் விபின்(வயது 33). இவருடைய மனைவி அனிதா(26). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். விபின் கட்டிட தொழிலாளியாக வேலைசெய்து வருகிறார். விபின் வீட்டின் அருகிலேயே அனிதாவின் தாயார் வீடு உள்ளது.
கணவன்–மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனிதா கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் முன்பகுதியில் அனைவரும் இருந்தனர். அப்போது வீட்டின் பின்பகுதிக்கு சென்ற அனிதா திடீரென உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனிதாவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story