சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்
பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணி தற்காலிகமாக நேற்று மாலை நிறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஜீயபுரம்,
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அணையில் தண்ணீரில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக சேர்ந்து 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.
அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகுகளில் இருந்து 5-வது மதகுகள் வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் நேற்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வடகரை பகுதியில் இருந்து சேதமடைந்த மதகுகள் அருகே மணல் மூட்டைகளை அடுக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சியில் பலத்த சூறைக்காற்று வீசியது. மேலும் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இதனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது. பணியை தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தி னர். தொழிலாளர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் பணி மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று மாலை சீரமைப்பு பணி தடைபட்டது. தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அணையில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக நாட்டு படகு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வந்தது. மேலும் ஒரு படகு இன்று வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அணை கட்டுவதற்கான பணிகளிலும் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பி விடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலணையில் மேற்கு பகுதியில் காவிரி ஆற்றில் உள்ள மணலை மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளின் பகுதிகள் படிப்படியாக வெளியே தெரிந்து வருகிறது. அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story