பனையூர் காட்டுவாரிகளில் தண்ணீர் திறக்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
நங்கம், பனையூர் காட்டுவாரிகளில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அருகே நங்கவரம் பகுதியில் உள்ள நங்கம், பனையூர் காட்டுவாரிகளில் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
நங்கவரம் மற்றும் பனையூரை சுற்றியுள்ள கிராம பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இப்பகுதி வழியாக செல்லும் நங்கம், பனையூர் ஆகிய இரு வாரிகளில், கட்டளைமேட்டு வாய்க்காலில் செல்லும் தண்ணீர் இனுங்கூர், புரசம்பட்டி பகுதியில் உள்ள மதகு வழியாக திறந்துவிடப்படும். இதைக்கொண்டு பயிர்சாகுபடி செய்துவந்தோம். இந்த நிலையில் கடந்த ஆண்டு சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்ததால் குறைந்த எண்ணிக்கை கொண்ட விவசாயிகள் மட்டுமே பயிர்செய்துவந்தனர்.
இந்த ஆண்டு காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் அதிக அளவு தண்ணீர் சென்றும் இந்த இரு வாரிகளில் தண்ணீர் திறக்காத காரணத்தால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்கள் குடிப்பதற்கு கூட போதிய தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். தண்ணீர் திறக்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இன்றுவரை தண்ணீர் திறக்கவில்லை. இதன் காரணமாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த அலுவகம் முன்பு அமர்ந்து தண்ணீர் திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் வட்டாட்சியர் ஈஸ்வரன் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின் பேரில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். இதில் குளித்தலை ஆற்றுபாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுமக்கள், உங்களுக்கு உத்தரவிடும் உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணை தெரிவியுங்கள் அவர்களிடம் நாங்கள் பேசிக்கொள்கிறோம்.
தண்ணீர் திறக்கும்வரை இந்த அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோம், வேண்டுமென்றால் எங்களை கைது செய்துகொள்ளுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். சிலபெண்கள் தண்ணீர் திறக்கக்கோரி கண்ணீர்விட்டு கதறி அழுது தீக்குளிக்கவும் தயார் என்றனர். சிலர் சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனர். சில மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வட்டாட்சியர் அறைக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகளை சுற்றிவளைத்துக்கொண்டு விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பேசினார்கள். இதனால் வேறு இடமின்றி தங்களுக்குள் ஆலோசனை செய்துகொள்ளவும், தங்களின் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கும் பொருட்டும் வட்டாட்சியர் அறைக்குள் இருந்த கழிவறைக்கு செல்லும் அறைக்கு அடிக்கடி சென்று அதிகாரிகள் ஆலோசனை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story