மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதல்: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் பலியானது எப்படி? உருக்கமான தகவல்
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
புதுக்கோட்டை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் விமல்ராஜ்(வயது 24). அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் அருண்பிரசாத்(23), நடராஜன் மகன் ராஜ சேகர்(21), இவரது தம்பி குணசேகர்(18).
இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரே மோட்டார் சைக்கிளில் இரட்டியப்பட்டியில் இருந்து விராலிமலை அருகே லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
அப்போது லஞ்சமேடு பிரிவு சாலையில் இருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மதுரையில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த, ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் ஆம்னி பஸ்சின் அடியில் சிக்கி கொண்ட மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் வரை இழுத்து சென்றது. இதில் பெட்ரோல் கசிந்து சாலையில் கொட்டியதால்,மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த விமல்ராஜ், அருண்பிரசாத், குணசேகர் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராஜசேகர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பலத்த காயமடைந்த ராஜசேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விமல்ராஜ், அருண்பிரசாத், குணசேகர் ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பஸ் டிரைவரான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கல்வராயன் மகன் ஆனந்த்(50) என்பவரை கைது செய்தனர்.
பலியான 4 பேரில் விமல்ராஜ் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும், குணசேகர் சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோ கிராபராகவும், ராஜசேகர் ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்தனர். அருண் பிரசாத் மட்டும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story