கணவர் மீது பொய் வழக்கு போட்டு என் கவுண்ட்டர் செய்ய முயற்சி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் பெண் மனு


கணவர் மீது பொய் வழக்கு போட்டு என் கவுண்ட்டர் செய்ய முயற்சி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் பெண் மனு
x
தினத்தந்தி 28 Aug 2018 3:45 AM IST (Updated: 28 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

கணவர் மீது பொய் வழக்கு போட்டு என் கவுண்ட்டர் செய்ய முயற்சி செய்வதாக குழந்தைகளுடன் வந்து போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் பெண் மனு அளித்தார்.

தஞ்சாவூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு மணல்மேடு தெருவை சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மனைவி சித்ரா(வயது35). இவர் நேற்று தனது மகன், 2 மகள்களுடன் தஞ்சையில் உள்ள போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் டி.ஐ.ஜி. லோகநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் கலைவாணன் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, இந்த வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணையில் தவறாது எனது கணவர் ஆஜராகி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி இரவு 2 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த என் கணவரை பெரம்பூர் போலீசார் வந்து எழுப்பி அழைத்து சென்றனர். எந்த குற்றமும் செய்யாதவரை எதற்காக பிடித்து வந்தீர்கள் என போலீசாரிடம் நான் கேள்விகேட்டேன். அதற்கு சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்து வந்து இருப்பதாகவும், இப்போது அவரை விடுவிக்க முடி யாது என்றும் போலீசார் கூறினர்.

ஆனால் பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்ததுடன் என் கணவரை அடித்து உதைத்து அவருடைய கால்களை உடைத்துவிட்டனர். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர். இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், நானும், எனது மாமனாரும் சென்று அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவரை என்கவுண்ட்டர் செய்வோம் என்றும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வோம் எனவும் போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பெரம்பூர் போலீசாருக்கு உரிய அறிவுரை வழங்கி என் கணவரை உயிருடன் மீட்டு தர வேண்டும். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story