விழுப்புரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறு நாள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்


விழுப்புரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறு நாள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பராமரிப்பு பணி காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறு நாள் 45 நிமிட நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

விழுப்புரம் ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) திருச்சி– சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்‌ஷனில் இருந்து வழக்கமான நேரமான காலை 10 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு புறப்பட்டு 2½ மணி நேரம் தாமதமாக விழுப்புரத்தை அடையும். மயிலாடு துறை –விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்கள் பண்ருட்டி– விழுப்புரம் இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். மதுரை– விழுப்புரம்– மதுரை பாசஞ்சர் ரெயில் விருத்தாசலம் ஜங்‌ஷன்– விழுப்புரம் இடையே இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படும்.

நாளை மறு நாள் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூர்– புதுச்சேரி– சென்னை எழும்பூர் பாசஞ்சர் ரெயில் முண்டியம்பாக்கம்– புதுச்சேரி இடையே இரு மார்கத்திலும் ரத்து செய்யப்படும். திருப்பதி– புதுச்சேரி– திருப்பதி பாசஞ்சர் ரெயில் முண்டியம்பாக்கம்– புதுச்சேரி இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும்.

சென்னை எழும்பூர்– மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக புறப்படும் பிற்பகல் 1.40 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 2.25 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு 60 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். காட்பாடி – விழுப்புரம்– காட்பாடி பாசஞ்சர் ரெயில் வெங்கடேசபுரம்– விழுப்புரம் இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும். மதுரை– விழுப்புரம்– மதுரை பாசஞ்சர் ரெயில் விருத்தாசலம் ஜங்‌ஷன்– விழுப்புரம் இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story