மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி 2 சிறுவர்கள் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி 2 சிறுவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 28 Aug 2018 3:57 AM IST (Updated: 28 Aug 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள்நேருக்கு நேர்மோதி க்கொண்டவிபத்தில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள். 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

மும்பை,

பால்கர் மாவட்டம் தகானு, உர்சே பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னில் (வயது28). இவருக்கு சமீபத்தில் தான் ஷர்மிளா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்வப்னில் தனது மனைவி ஷர்மிளாவுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று ரக்‌ஷா பந்தனை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து மாலை அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

தகானு, சரானி பகுதியில் வந்தபோது ஸ்வப்னில் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், அந்தவழியாக எதிரே வந்து கொண்டு இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின. மேலும் புதுமண தம்பதி ஸ்வப்னில், ஷர்மிளா, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாந்னா பகுதியை சேர்ந்த மோகன், சிறுவர்கள் ஆருஷ்(3), மான்வி(4) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து 5 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்வப்னில், ஷர்மிளா, மோகன் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

சிறுவர்கள் ஆருஷ், மான்விக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story