அதிக வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி


அதிக வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி
x
தினத்தந்தி 28 Aug 2018 5:24 AM IST (Updated: 28 Aug 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

அதிக வட்டி தருவதாக கூறி திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தால் அதிக வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில் வட்டி மற்றும் போனஸ் சேர்த்து ரூ.91 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் பணத்தை செலுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் அதில் பணத்தை செலுத்தியவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்திய முகவர்கள் சிலர், நேற்று மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து முகவர்கள் கூறுகையில், அந்த நிதி நிறுவனத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் முகவர்களாக இருந்தனர். ஒவ்வொரு முகவர்களும் நண்பர்கள், உறவினர்கள் என பலரை நிதிநிறுவனத்தின் சேமிப்பு திட்டத்தில் சேர்த்து விட்டுள்ளோம். எங்கள் மீதான நம்பிக்கையின் பேரில் தான் அனைவரும் பணம் கொடுத்தனர். அந்த வகையில் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் திடீரென நிதி நிறுவனத்தை மூடி விட்டு சென்று விட்டனர். இந்த மோசடியால் பொதுமக்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பணத்தை கொடுத்தவர் கள் எங்களிடம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலாக உள்ளது. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் வசூலித்து கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும், என்றனர். 

Next Story