கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் அருப்புக்கோட்டையில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். சூரியமூர்த்தி, பரமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இயற்கை இடர்பாடிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் பொருளாளர் போத்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story