தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை மனைவியின் கள்ளக்காதலன் கைது
குன்றத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி (32), கட்டிட வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டில் படுத்திருந்தார். தேவி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு வீட்டுக்கு வந்தபோது கணவர் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், அவருக்கு அமைந்தகரையை சேர்ந்த வேலு (41), என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை அமைந்தகரையில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், வேலுவும், தேவியும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதையடுத்து வீட்டில் ராஜேந்திரன் இல்லாதபோது வேலு வீட்டிற்கு வந்து தேவியுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலு, தேவி வீட்டுக்கு வந்துள்ளார். ராஜேந்திரன் வீட்டிலேயே இருந்ததால் அவரால் தேவியை பார்க்க முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலு, ராஜேந்திரன் இருக்கும் வரை தன்னால் தேவியுடன் இருக்க முடியாது என்று எண்ணி நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த வேலு, ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த வேலு அருகில் இருந்த கல்லை எடுத்து ராஜேந்திரனின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் தேவி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவருக்கு அமைந்தகரையை சேர்ந்த வேலு (41), என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை அமைந்தகரையில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், வேலுவும், தேவியும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதையடுத்து வீட்டில் ராஜேந்திரன் இல்லாதபோது வேலு வீட்டிற்கு வந்து தேவியுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலு, தேவி வீட்டுக்கு வந்துள்ளார். ராஜேந்திரன் வீட்டிலேயே இருந்ததால் அவரால் தேவியை பார்க்க முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலு, ராஜேந்திரன் இருக்கும் வரை தன்னால் தேவியுடன் இருக்க முடியாது என்று எண்ணி நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த வேலு, ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த வேலு அருகில் இருந்த கல்லை எடுத்து ராஜேந்திரனின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story