காலி பணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சருக்கு, மருந்தாளுனர் சங்கத்தினர் மனு அனுப்பும் போராட்டம்


காலி பணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சருக்கு, மருந்தாளுனர் சங்கத்தினர் மனு அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:15 AM IST (Updated: 29 Aug 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூர் அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.

திருவாரூர்,

மருந்தாளுனர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜதுரை, மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன், மாநில துணை தலைவர் பைரவநாதன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 42 துணை இயக்குனர் சுகாதார பணிகள் மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். 110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்கிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின்கீழ் இயங்கும் 232 மாவட்ட மருந்து கிடங்குகளில் மருத்துவ கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story