கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 12 கடைகள் அகற்றம்
கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 12 கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டை ஆற்று பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதேபோல சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த டீக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 12 கடைகள் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செல்வகுமார், சாலை ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story