காஞ்சீபுரம் மாவட்டம், ஹெல்மெட் அணியாததால் 3 ஆண்டுகளில் 714 பேர் உயிரிழந்தனர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் கடந்த 3 ஆண்டுகளில் 714 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில், இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்டத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளில் ஹெல்மெட் அணியாதவர்களே பெரும்பாலும் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மொத்தம் 714 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1,500– க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இந்த விதியை மீறுபவர் மீது மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன் படி வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ஹெல்மெட் அணியாத 42 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 4 நாட்களில் ஹெல்மெட் இன்றி பின்னால் அமர்ந்து சென்ற 5,741 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர் சிக்கும் பட்சத்தில், அபராதம் விதிப்பதோடு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் அறிவுறுத்துவார்கள். எனவே மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் இந்த நடைமுறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story