வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு முகாம்
காஞ்சீபுரம், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வாலாஜாபாத்,
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முகாமில் இருசக்கர வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்கள்.
இதேபோல், சுங்குவார்சத்திரம் பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்கள்.
வாலாஜாபாத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை ஒன்று சேர்த்து ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்படும் அபாயம் குறித்தும், ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் சோத்துப்பாக்கம் கூட்டுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
மேலும் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. இதை இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தொடங்கி வைத்தார். இதில் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜின்னாபாஷா, அருள்மணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதில் சப்–இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதில் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கோர்ட்டு உத்தரவுப்படி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முகாமில் இருசக்கர வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்கள்.
இதேபோல், சுங்குவார்சத்திரம் பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்கள்.
வாலாஜாபாத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை ஒன்று சேர்த்து ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்படும் அபாயம் குறித்தும், ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் சோத்துப்பாக்கம் கூட்டுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
மேலும் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. இதை இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தொடங்கி வைத்தார். இதில் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜின்னாபாஷா, அருள்மணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் படாளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் படாளம் கூட்டுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இதில் சப்–இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் செய்யூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான செய்யூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இதில் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story