பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது என்று கலெக்டர் கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு வருகிற 31–ந்தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வருகிற (செப்டம்பர்) 14–ந்தேதியும் நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் மேற்கண்ட நாட்களில் காலை 9 மணிக்கு பெரம்பலூர் சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் (இருபாலர்) நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கும், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று போட்டிகள் நடைபெறும் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் (இருபாலர்) காலை 9 மணிக்கு வருகை தந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும்.


மேலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும்– சான்றிதழ்கள் வழங்கப்படும். மேற்காணும் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநில போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) முனைவர் சிவசாமி போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை மேல்நிலைப்பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story