வாகன போக்குவரத்திற்கும் பொதுமக்கள் நடை பயணத்திற்கும் இடையூராக வாகனங்களை நிறுத்த கூடாது


வாகன போக்குவரத்திற்கும்  பொதுமக்கள் நடை பயணத்திற்கும் இடையூராக வாகனங்களை நிறுத்த கூடாது
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

வாகன போக்குவரத்திற்கும் பொதுமக்கள் நடை பயணத்திற்கும் இடையூராக வாகனங்களை நிறுத்த கூடாது என பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் பேசினார்.

புதுக்கோட்டை,

நீதிமன்ற உத்தரவின்படி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்யக்கூடாது. மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. அதிக ஒலி தரும் காற்று ஒலிப்பான்களை(ஹாரன்) பயன்படுத்த கூடாது. கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும். வாகன போக்குவரத்திற்கும் பொதுமக்கள் நடை பயணத்திற்கும் இடையூராக வாகனங்களை நிறுத்த கூடாது. வாகனங்களை தாறுமாறாகவும், அதிவேகமாகவும் ஓட்டக்கூடாது.

வாகனங்களை உரிமம் பெறப்படாத செயல்களுக்கு பயன்படுத்த கூடாது. பதிவு எண் பலகையில் பதிவு எண்களை தவிற வேறு அடையாள சின்னங்களையோ? எழுத்துகளையோ எழுதக்கூடாது என்றார். கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலசுப்பிரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை, கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான், டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் விவேக், பூர்விகா, ரஜாத், போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story