தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி-திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கி, கொடியசைத்து வழி அனுப்பினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆடைகள், சோப்பு, தேங்காய் எண்ணெய், காப்பித்தூள், டீத்தூள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை மாநகர செயலாளர் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
திருச்செந்தூரில் தமிழக மாணவர் இயக்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ரூ.15 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பால் பவுடர், துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சேகரித்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு கொடி அசைத்து, நிவாரண பொருட்கள் ஏற்றிய மினிலாரியை கேரளாவுக்கு வழியனுப்பி வைத்தார். மாணவர் இயக்க நிர்வாகிகள் சிவனேசன், பிரகாஷ், மதன்ராஜ், காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி, மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர், நூலகர் மாதவன், டாக்டர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சார்பில் ரூ.40 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதனை தலைமை டாக்டர் பொன் ரவி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 400 கிலோ அரிசி கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாத்தான்குளம்-கோவில்பட்டி
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர் சங்கம் சார்பில், ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 600 மதிப்பிலான அரிசி மூட்டைகளும், ரூ.7 ஆயிரமும் அனுப்பி வைக்கப்பட்டது. பொத்தக்காலன்விளை கிராம மக்கள் சார்பில், தலா 50 கிலோ எடை கொண்ட 25 அரிசி மூட்டைகளை சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜிடம் வழங்கினர். பின்னர் அவற்றை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அரிசி, பருப்பு, மருந்து பொருட்கள், பிஸ்கட், கோதுமை மாவு உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நேற்று மாலையில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story