பிறைகுடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


பிறைகுடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 29 Aug 2018 3:00 AM IST (Updated: 29 Aug 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

பிறைகுடியிருப்பு முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழாவை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி, 

பிறைகுடியிருப்பு முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடைவிழாவை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி கொடைவிழா

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆவணி கொடை விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. மாலையில் மாக்காப்பு சாத்துதல், கொடிப்பட்ட பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் குருபூஜை, அன்னதானம் நடந்தது.

மாலையில் மழை வேண்டியும், உடன்குடி பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்ப வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜை, கும்பம் வீதி உலா, இரவில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

இன்று (புதன்கிழமை) அதிகாலையில் சிறப்பு பூஜை, அன்ன வாகனத்தில் அம்பாள் பவனி வருதல், கும்பம் வீதி உலா, மதியம் மஞ்சள் பெட்டி எடுத்தல், மாலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதல், இரவில் கூழ் வார்த்தல், வில்லிசை நடக்கிறது.

அம்பாள் தேர்பவனி

நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் சிறப்பு பூஜை, அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சிறப்பு பூஜைக்கு பின்னர் அம்பாள் தேரில் பவனி வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story