தாலுகா அலுவலகங்கள் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தாலுகா அலுவலகங்கள் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி படி, இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் பெறும் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதம் உயர்த்தியும், 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சூளகிரியில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க சூளகிரி வட்டக்கிளை சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலாளர் சங்கீதா வரவேற்று பேசினார். இதில், வட்ட தலைவர் முருகன், செயலாளர் திம்மராயன், மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட இணை செயலாளர் முனிராஜ், வட்ட பொருளாளர் சுகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதேபோல் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மாதன், ராமச்சந்திரன், முருக கண்ணன், செல்வராஜ், சரவணன், சகாதேவன், மாவட்ட துணை தலைவர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வேடி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தண்டவராயன் வரவேற்றார். மாநில செயலாளர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் கலைவாணன் மாவட்ட துணை தலைவர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், வட்ட செயலாளர் பச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுரவ தலைவர் நரசிம்மன், மாவட்ட செயலாளர் ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் நாட்கணக்கில் வழங்கப்பட வேண்்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் முனிராஜ் நன்றி கூறினார்.

Next Story