ஆலங்குளம் அருகே சோகம் மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
ஆலங்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விபத்தில் மகன் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை அக்கினி மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 44). இவர்களுடைய மகன் அரிராமர் (25). இவர் கடந்த மாதம் வள்ளியூர் அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்ட மாரியம்மாள் நேற்று முன்தினம் திடீரென விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தங்கபாண்டி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மாரியம்மாள் மயங்கி விழுந்துள்ளார்.
பரிதாப சாவு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கபாண்டி மற்றும் உறவினர்கள் மாரியம்மாளை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மாரியம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story