நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
எடப்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்த 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சங்ககிரி,
எடப்பாடி தாலுகா கோனேரிப்பட்டியில் கதவணை சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் ரங்கசாமி(வயது 47). இவர் தினமும் இரவு 8 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவர் கடையில் உள்ள அனைத்து நகைகளையும் ஒரு பையில் வீட்டுக்கு எடுத்து செல்வார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி இரவு 8 மணிக்கு இவர் கடையை பூட்டினார். பின்னர் கடையில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை ஒரு பையில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார். அவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், தனது வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கோனேரிப்பட்டி நடுவீதியில் சென்ற போது, சங்ககிரி தாலுகா கண்டர்குல மாணிக்கம் பெரியாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(வயது 23), விஜி என்ற விஜயன்(34), செந்தில் என்ற செந்தில்ராஜா(25), சேலம் கடத்தூர் அக்ரஹாரம் கூலிப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன்(33) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து மிளகாய் பொடியை ரங்கசாமி மீது தூவி, 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிக்கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறுகள் இருந்த பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமார், விஜயன், செந்தில், கேசவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில், சந்தோஷ்குமார், விஜயன், கேசவன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டார். அதே நேரத்தில் குற்றம் நிரூபிக்கப்படாததால் செந்தில் ராஜா விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட, சந்தோஷ் குமார் கோவை மத்திய சிறையிலும், விஜயன், கேசவன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story