வானவில் : கைதட்டும் ரோபோ
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் கைதட்டும் ரோபோவை உருவாக்கியுள்ளது.
மனிதர்கள் கை தட்டினால் உருவாகும் ஒலியைப் போன்று அதே தன்மையுடன் இந்த ரோபோவும் கைதட்டல் ஒலியை எழுப்புவதுதான் இதன் சிறப்புத்தன்மை.
‘பிக் கிளாப்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஜப்பானில் மிகவும் பிரபலமானது. கைதட்டல் ஒலி மனிதர்களை உற்சாகப்படுத்தும் என்பதால் இந்த ரோபோவை அவர்கள் வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர். இந்த ஆண்டு லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக மின்னணு கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் இந்த பிக் கிளாப்பர் வெகுவாகக் கவர்ந்தது.
இந்த ரோபோ இயந்திர மொழியில் வாயசைத்து, கைதட்டுவது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. மேலும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப் பட்டுள்ளது.

Related Tags :
Next Story