வானவில் : நோக்கியாவின் புதிய அறிமுகம் 6.1 பிளஸ், 5.1 பிளஸ்
நோக்கியா நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை டெல்லியில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் என்ற இரண்டு மாடல்களும் முந்தைய மாடல்களை விட மேம்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டவை. இதில் 6.1 பிளஸ் மாடல் நாளை ஆகஸ்டு 30 முதல் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றொரு மாடலான 5.1 பிளஸ் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே முழுமையான ஸ்கிரீன், உயர் செயல்திறன், ஏ.ஐ. இமேஜிங் சிறப்பம்சம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்கள் ஏற்கும் வகையிலான விலை அம்சத்துடன் வந்துள்ளது. இவை இரண்டுமே ‘பிளிப்கார்ட்’ இணையதளம் மற்றும் நோக்கியா இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. நோக்கியா 6.1 பிளஸ் மாடல் விலை ரூ. 15,999 ஆகும். அடுத்த மாடலான 5.1 பிளஸ் விலை செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.1 பிளஸ் மாடல் சிறப்பம்சங்கள்
இது 5.8 அங்குல திரை கொண்டது. இதன் ஹெச்.டி. அளவு 19:9 என்ற விகிதத்தில் 96 சதவீதம் வண்ணங்களால் நிரம்பிவழியும் வகையில் புதுமையான செல்போன் அனுபவத்தை அளிக்கக் கூடியது. ஸ்மார்ட்போனுக்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் இதில் உள்ளன. இதன் முன்புறம் மற்றும் பின் பகுதி கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. மிக நேர்த்தியான வடிவமைப்போடு குவால்காம், ஸ்னாப்டிராகன் 636 மொபைல் இயங்குதளம் உள்ளது. இது முந்தைய மாடல்களைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதல் செயல் திறன் கொண்டது. அத்துடன் இதில் நீடித்து உழைக்கும் பேட்டரியும் உள்ளது.
நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் 16 மெகா பிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இரட்டை கேமரா பின்புறம் உள்ளது. இது துல்லியமாக படம் பிடிக்க உதவும். ஏ.ஐ. இமேஜிங் நுட்பம் இருப்பதால் நேர்த்தியான படத்தை எடுக்க உதவும். முன்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமரா இருப்பதால் செல்பி பிரியர்களுக்கு ஏற்றது. முன்புறம் மற்றும் பின்புற கேமராக்களுக்கும் மாஸ்க், பன் பில்டர் தொழில் நுட்பங்கள் செயல்படும். இதை உடனடியாக உங்களது முக நூல் (பேஸ்புக்) மற்றும் யூ-டியூபில் பதிவேற்றலாம். இந்த வசதி நோக்கியா ஸ்மார்ட்போனில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சம்
இதில் மீடியாடெக் ஹிலியோ பி60 ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. கேமிங், வீடியோ, பன்முக செயல்பாடு அப்ளிகேஷன்களை மிக எளிதாக செயல்படுத்த உதவும். இதிலும் போகே பிளர், போர்டிரெய்ட் லைட்டிங் வசதி உள்ளது. பின்பகுதியில் 13 மெகா பிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெல் கொண்ட இரட்டை கேமராக்கள் உள்ளது.
இந்த போன் 5.8 அங்குல திரையைக் கொண்டது. மேலும் பாலிகார்பனேட் பிரேமைக் கொண்டது. இது அதீத வெப்பமான சூழல் மற்றும் தவறி விழும் சமயங்களிலும் போன் மற்றும் கேமராவின் சேதத்தை குறைக்கும் வகையில் இருக்கும்.

இந்த இரண்டு மாடல்களுமே சீனாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோக்கியா எக்ஸ்5 மற்றும் நோக்கியா எக்ஸ்6 என்ற பெயரில் அறிமுகமானவற்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது இங்கு அறிமுகம் செய்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுபவை. இரண்டிலுமே கூகுள் லென்ஸ், ஆண்ட்ராய்டு பை ஆகிய வசதிகள் உள்ளன. ஏர்டெல் உடனடி சலுகையாக ரூ. 1800 கேஷ் பேக் அளித்துள்ளது. அத்துடன் 240 ஜி.பி. டேட்டா ஸ்டோரேஜ் வசதியையும் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story