மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது


மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2018 3:45 AM IST (Updated: 29 Aug 2018 8:29 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் செழுவன்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி வின்சென்ட் (வயது 45). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற பஸ்சில் கண்டக்டராக பணி செய்தார்.

அந்த பஸ் கழுவன்திட்டை பகுதியில் சென்றபோது, மேல்புறம் அருகே வெங்கனங்கோடு பகுதியை சேர்ந்த சினோஜ் (21) என்ற வாலிபர் பஸ்சில் ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் ஸ்டான்லி வின்சென்ட் கூறினார். இதனால் சினோஜ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் மார்த்தாண்டம் பகுதியில் சென்றபோது, சினோஜ் திடீரென கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

 இதுபற்றி ஸ்டான்லி வின்சென்ட் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஈஸ்வர பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சினோஜை கைது செய்தார்.

Next Story