கவனம் இல்லாமல் சாலையை கடந்த பெண்; நடுரோட்டில் கார் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்


கவனம் இல்லாமல் சாலையை கடந்த பெண்; நடுரோட்டில் கார் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Aug 2018 3:45 AM IST (Updated: 29 Aug 2018 8:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே கவனம் இல்லாமல் சாலையை பெண் கடந்தபோது மோதாமல் இருக்க நிறுத்தப்பட்ட கார் மீது மற்றோரு கார் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரை சேர்ந்தவர் ஒச்சம்மாள் (வயது40). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது.

அப்போது கவனம் இல்லாமல் ஓச்சம்மாள் சாலையை கடப்பதை கண்ட கார் டிரைவர் அவர் மீதுமோதி விடக்கூடாது என்பதற்காக சட்டென்று பிரேக்கை அழுத்தி பிடித்து காரை நிறுத்தினார். அப்போது திருப்பரங்குன்றத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற கார் வந்த வேகத்தில் பிரேக்பிடித்து நிறுத்தப்பட்ட கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அந்த கார் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த கார் டிரைவர் ஹார்விப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் (30) படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒச்சம்மாள் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story