வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்
வீட்டுவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. நகர செயலாளர் காத்தமுத்து தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர் ராஜா வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பூங்கோதை, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் அருப்புக்கோட்டை செவல் கண்மாய், பெரிய கண்மாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும், சொக்கலிங்கபுரம் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும், நகரில் நடக்கும் திருட்டுகளை தடுக்க போதிய மின் விளக்கு வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் குடிநீர் ஆதாரம் மாசு படுவதை தடுக்க வேண்டியது அவசியமாகும். நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட்ட வீட்டு வரியை ரத்து செய்வதோடு குப்பைக்கு வரி வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், வேலுச்சாமி, நகர கமிட்டி உறுப்பினர் பெரிய சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story