குர்லாவில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது மது குடிக்க பணம் கேட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்


குர்லாவில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது மது குடிக்க பணம் கேட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 30 Aug 2018 3:00 AM IST (Updated: 30 Aug 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் கேட்டு தாயை அடித்த அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மது குடிக்க பணம் கேட்டு தாயை அடித்த அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மது குடிக்க பணம் கேட்டு...

மும்பை குர்லா காஜூவாடி பகுதியை சேர்ந்தவர் சோனு (வயது28). இவர் தம்பி மோனு (25) மற்றும் தாயுடன் வசித்து வந்தார். சோனு மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு மது குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். தாய் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது தம்பி மோனு, அண்ணன் தாயை அடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் ஆத்திரமடைந்த அவர் அருகே கிடந்த கல்லை எடுத்து அண்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

தம்பி கைது

இதனால் பதறிப்போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சோனுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் கொண்டு வரும் வழியிலேயே சோனு உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர்.

தகவல் அறிந்த போலீசார் சோனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story