கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கும்பகோணத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக பள்ளி மாணவிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். அப்போது ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் புரிகிறதா? நல்ல முறையில் சொல்லி தருகிறார்களா? என மாணவிகளிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் கோரிக்கைகளை தெரிவியுங்கள் என்றும் மாணவிகளிடம் கூறினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
தமிழகத்துக்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி தமிழகத்தின் பாடத்திட்டத்தை பாராட்டி சென்றார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் திகழ வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 படிக்கும் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு அடுத்த வாரம் இறுதிக்குள் மடிக்கணினி கிடைத்துவிடும்.
மாணவர்கள் தங்களுடைய விருப்பம் போல் பாடத்திட்டத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாணவர்களின் திறமையை மேம்படுத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றின் காரணமாக படித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை இனி இருக்காது. அந்த அளவுக்கு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிப்பதற்காக 319 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் சி.ஏ. தேர்வில் வெற்றி பெற வசதியாக 500 பட்டய கணக்கர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்தியாவில் என்ஜினீயரிங் படித்த 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்று கூறுகிறார்கள். மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது ஏற்படும் இடையூறுகள் குறித்து 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் கன்டெய்னர் லாரியில் அனுப்பி வைக்கப்படும். கல்வித்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் சிவபதி, அ.தி.மு.க. நகர செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன், கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாம்பம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story