வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை ஒன்றிய தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் சுந்தரி, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கான உணவு செலவீட்டுப்படியை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றி கூறினார்.

Next Story