நீலகிரி மாவட்ட, சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஊட்டி,
இதுகுறித்து நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வியை தொடர்ந்து பயில முடியாத சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் ‘பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை‘ என்ற திட்டம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மேற்கண்ட சிறுபான்மையின மாணவிகள் 2018-2019-ம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை மத்திய அரசின் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை www.ma-ef.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றிதழ்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் சான்று அளித்த கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் செயலாளர், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை, மவுலானா ஆசாத் வளாகம், புதுடெல்லி ரெயில் நிலையம் எதிரில், புதுடெல்லி-110055 என்ற முகவரிக்கு அடுத்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வரால் சான்று அளிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம், நிறுவன சரிபார்ப்பு படிவம், சுய சான்றொப்பத்துடன் கூடிய முந்தைய வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், சுய உறுதிமொழியுடன் கூடிய சிறுபான்மையின சாதி சான்றிதழ், விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு ஆகிய விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது. 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.12 ஆயிரமும் 2 தவணைகளில் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன் மாற்று முறையில் செலுத்தப்படும். இந்த கல்வி உதவித்தொகையில் சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் உண்டு உறைவிடம் ஆகிய செலவினங்களும் அடங்கும்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தர மதிப்பெண்கள் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும். மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலும் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் மட்டுமே குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான தர மதிப்பெண்கள் முந்தைய வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி பெற தகுதி உடையவர்கள் ஆவர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.maef.nic.in மற்றும் https://scholarship&maef.org/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எனவே நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story