சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் தேவிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தொகையை ரூ.5-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளர்களை முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்து காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சக்தி, மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story