கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.
கரூர்,
கரூர் காந்திகிராமம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஆய்வு செய்தார். அப்போது தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் காந்திகிராமத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.269½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. 800 படுக்கைகள் கொண்டதும், 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடியதுமாக இந்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் வருகிற 2019-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் முடித்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செவிலியர் கல்லூரி இந்த மருத்துவக்கல்லூரிக்கு அருகில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைவதன் மூலம் அங்கு பயிலும் செவிலியர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி அளிக்க ஏதுவாகவும், மருத்துவக்கல்லூரி பணிகளுக்கு அதிக அளவிலான செவிலியர்களை பயன்படுத்த ஏதுவாகவும் அமையும். எனவே இந்த கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மருத்துவமனையும், கல்லூரியும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story