ஆர்.கே.நகர் தேர்தலில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் பிரதிபலிக்கும்
ஆர்.கே.நகர் தேர்தலில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் பிரதிபலிக்கும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு நல்ல விதமாக வரும். அப்போது நடைபெறும் ஓட்டெடுப்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முடிவுக்கு வரும். அதனால் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில், கோவிலாக செல்கிறார்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது புரட்சிகரமாக தெரிந்தது. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதி போல தான் இதுவும். உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் தொழில்களும் முடங்கிவிட்டன. இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தொழில்களும் நசுங்கி விட்டன. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அதனால் தான் பணமதிப்பிழப்பு விவகாரம் தோல்வியில் முடிந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்கும். குக்கர் சின்னம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
ஆறு, ஏரி, குளங்களை தூர்வார ரூ.600 கோடி ஒதுக்கினார்கள். அந்த பணம் எங்கே சென்றது என தெரியவில்லை. தண்ணீரில் போனதா? என தெரியவில்லை. நிறைய திட்டங்களில் ஊழல் நடந்தது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் ஊழலுக்கு என்றே ஒரு திட்டம் என்றால் அது தூர்வாரும் திட்டம் தான். விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு இந்த திட்டம் உள்ளது.
தி.மு.க.வின் திடீர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காவி மயத்தை ஒழிப்போம். பகல் கொள்ளை ஆட்சியை ஒழிப்போம் என்று திடீர் ஞானோதயம் வந்தது போல் பேசுகிறார். ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா பங்கேற்க வருமாறு அவருடைய வீட்டில் காத்திருந்து அழைப்பிதழ் கொடுத்தனர். அவர் வரவில்லை என்ற விரக்தியில் ஸ்டாலின் இப்படி பேசி உள்ளார்.
அதே நேரத்தில் பகல் கொள்ளை ஆட்சி என்று முன்பே தெரியாதா? எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று கையை பிடித்து கெஞ்சி உள்ளார். இது எல்லாம் தலைமை பண்பா? நான் செல்லும் வழி நெடுகிலும் தி.மு.க. தொண்டர்களே இதை கூறுகிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களை கைது செய்கிறார்கள். இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இது நிச்சயம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story