ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கிராமத்திலே வாழ்கின்ற மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, கவனம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம், அதேபோல, ஏற்கனவே இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிகளவில் நோயாளிகள் வருகின்றபொழுது அந்தப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி, இன்றைக்கு தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது.
அகில இந்திய அளவில் பார்க்கின்றபொழுது, மருத்துவத்துறையிலே தமிழகம் முதன்மை மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையை பார்க்கின்றோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக, தாய்மார்களுக்கு அளிக்கப்பட்ட உதவித் திட்டத்தின் வாயிலாக, கருவுற்ற பெண்களுக்கு தேவையான சிகிச்சை அளித்ததன் விளைவாக, மருத்துவத் துறையில், சிறந்த, அற்புதமான திட்டத்தை கொடுத்ததன் விளைவாக, டாக்டர்கள் சிறந்த சிகிச்சை அளித்து, இன்றைக்கு பிரசவ காலத்தில் இறக்கின்ற குழந்தைகளின் இறப்பு சதவீதமும், அதேபோல, பிரசவ காலத்தில் தாய்மார்கள் இறக்கின்ற சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
அதுமட்டுமல்லாமல், உலக வங்கி உதவியுடன், தனியார் மருத்துவமனைக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளில், நவீன சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு தேவையான கருவிகள் வாங்கிக் கொடுக்கப்பட்டு, சிறந்த டாக்டர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலையை இன்றைக்கு உருவாக்கித் தந்திருக்கின்றோம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, இறந்தவர் ஒருவரின் உடலில் இருந்து இரண்டு கைகளை எடுத்து, பொருத்தி, தமிழ்நாடு டாக்டர்கள் சாதனை புரிந்திருக்கின்றார்கள். இன்றைக்கு அவர் கூடைப்பந்து விளையாடுகின்ற அளவுக்கு இருக்கின்றார். இந்தியாவிலே எந்த அரசு மருத்துவமனையிலும் இதுபோல் பொருத்தவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கின்ற டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து, மருத்துவ சேவை அளிப்பதில் அகில இந்திய அளவிலே தமிழகம் முதலிடம் வகிக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கு அ.தி.மு.க. அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் உபரிநீர் இருக்கின்றதோ, அந்த உபரிநீரை பயன்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற 6 தலைமை பொறியாளர்களை நியமித்து அந்தக்குழு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, எங்கெங்கெல்லாம் பருவமழை காலங்களில் பெய்கின்ற மழைநீர் எவ்வளவு வீணாக கடலிலே கலக்கின்றது என்பதை கணக்கிட்டு, எந்த இடத்திலே தடுப்பணை கட்டவேண்டும், எந்த இடத்தில் நதியின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும், எந்தப் பகுதியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, எந்தெந்த பகுதிக்கு வினியோகம் செய்யமுடியும், எந்தெந்த ஏரியிலே நிரப்ப முடியும் என்ற ஆய்வுப்பணியை மேற்கொண்டு, அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு பருவ காலங்களிலே பெய்கின்ற மழைநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற மழைநீரை ஏரிகள், குளங்கள், ஓடைகள் வழியாக நாம் சேமித்து வைப்பதன் மூலமாக நிலத்தடி நீர் உயரும். ஆகவே, அப்படிப்பட்ட பணியை செய்வதற்காக, முதற்கட்டமாக, அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி, 1519 ஏரிகளை பரிட்சார்த்த முறையிலே எடுத்து, அந்தப் பணிகள் துவக்கப்பட்டு, வெற்றிகரமாக இருந்த காரணத்தினால், மேலும், இந்த ஆண்டு 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ரூ.328 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றன.
தடுப்பணைக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அந்த தடுப்பணையின் மூலமாக, மூன்றாண்டுகளிலே இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஆங்காங்கே உள்ள ஓடைகள் வருகின்ற நீரை சேமித்து, நதிகள் மூலமாக வீணாகும் நீரை தடுப்பணைகள் கட்டி, நீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்துவது.
அதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கி, முதற்கட்டமாக ரூ.292 கோடி இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்டு, 62 தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Tags :
Next Story