கானூரில் பழுதடைந்துள்ள ஓடம்போக்கி ஆற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
திருவாரூர் அருகே கானூரில் பழுதடைந்துள்ள ஓடம்போக்கி ஆற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் திருவாரூர் ஓடம்போக்கி ஆறு வழியாக நாகை மாவட்டம் வரை செல்கிறது. திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றின் மறுகரைக்கு செல்வதற்காக நிறைய இடத்தில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருசில பாலங்களில் பெரிய வாகனங்கள் செல்லும் வகையிலும், ஒரு சில பாலங்களில் இரு சக்கரவாகனம் மட்டும் செல்லும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளன.
திருவாரூர்-நாகை எல்லை பகுதியான கானூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தூண்கள் தற்போது மிகவும் பழுதடைந்து, கான்கிரீட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆற்றில் அதிகமான தண்ணீர் செல்வதால் தூண்கள் மேலும் பலவீனம் அடைந்து எந்த நேரத்திலும் இடியும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். மேலும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது ஆற்றில் அதிகமான தண்ணீர் செல்வதால் பழுதடைந்த பாலத்தின் தூண்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story