அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் பொருட்கள் கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்
வடுவூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட் களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
வடுவூர்,
திருவாரூர் மாவட்டம் வடுவூர் தென்பாதி ஊராட்சிக்கு உட்பட்ட வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், பீரோ மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது கிராம மக்கள் பொருட்களை சீர்வரிசையாக பள்ளிக்கு எடுத்து சென்றனர். இதையொட்டி தாரை தப்பட்டை இசை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை சித்திரவல்லி வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் சம்பத், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் தமிழ்மணி, துணைத்தலைவர் மருதமுத்து, பொருளாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் தங்களுடைய குடும்ப விழாவை போல பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து சென்று வழங்கியது பள்ளி மாணவ-மாணவி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story