நிதி நிறுவனம் நடத்தி மோசடி: சொத்துகளை ஏலம் விட்டு வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுக்க நடவடிக்கை
மத்தம்பாலையில் உள்ள நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே மத்தம்பாலை பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர் நிர்மலன் மற்றும் இயக்குனர்கள் மாயமானார்கள். முதலீடு செய்யப்பட்டிருந்த கோடிக் கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் நிர்மலன் உள்பட 18 பேரை கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன் நிர்மலனின் வீடு மற்றும் நிதி நிறுவன கட்டிடங்கள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழந்த பணத்தை திருப்பி பெற்று கொடுக்கும் வகையில் கோர்ட்டு உத்தரவின்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பால்துரை, தக்கலை துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று மத்தம்பாலைக்கு வந்தனர். அவர்கள் ‘சீல்‘ வைக்கப்பட்டிருந்த நிதிநிறுவன கட்டிடங்கள் மற்றும் உரிமையாளரின் வீட்டை திறந்து அலுவலகமாக மாற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். அவர்களிடம் துணை சூப்பிரண்டு பால்துரை கூறியதாவது:-
நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் இயக்குனர்கள் பினாமி சொத்துகளை பறிமுதல் செய்து, கோர்ட்டு மூலம் ஏலமிட்டு, அந்த பணத்தை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களின் விவரங்கள், வங்கி கணக்குகள் சேகரிக்க வசதியாக ‘சீல்‘ வைக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா கட்டிடத்தில் செயல்படும் அலுவலகத்தில் அல்லது நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வங்கி கணக்கை வழங்க வேண்டும். தற்போது வரை 300 கோடிக்கு மேல் சொத்துகள் கண்டறியப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் உள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு சென்று அந்த சொத்துகள் சட்டப்படி பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story