பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தொடக்கம்
வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்ததையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில், பக்தர்களை 3 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்வது ரோப்கார் சேவையே ஆகும்.
இதனால் பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தவே அதிகம் விரும்புகின்றனர். பக்தர்களின் வரவேற்பை பெற்ற ரோப்காரில் தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், கடந்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் ரோப்கார் நிலையத்தின் கீழ், மேல்தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கம்பிவடம், சாப்ட் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் அகற்றப்பட்டு புதிய உபகரணங்கள் ரோப்காரில் பொருத்தப்பட்டன. மேலும் ரோப்கார் பெட்டிகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. எடை இல்லாமலும், கற்கள் மூலம் எடை வைத்தும் இந்த சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின்னர் ரோப்கார் பாதி வழியில் திடீரென நின்றால், அதில் பயணம் செய்யும் பக்தர்களை எப்படி மீட்பது என்ற ஒத்திகையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
49 நாட்கள் நடந்த இந்த பராமரிப்பு பணிகளில் அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. அதையடுத்து பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். முன்னதாக காலை 10 மணிக்கு ரோப்கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜை நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், செயற்பொறியாளர் சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பராமரிப்பு பணி குறித்து கோவில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘ரோப்கார் சேவை கடந்த மாதம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு இன்று முதல் (அதாவது நேற்று) ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக ரூ.8 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை முதலே ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Related Tags :
Next Story