ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் கைது
ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தொழிலாளர் துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் துறையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராமு (வயது 55). இவர் சூளகிரி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அளவீட்டு கருவிகளை சரி பார்த்து சீல் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அதற்கான கட்டண தொகையை வசூலித்ததுடன் லஞ்சமாக ரூ.24 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.
அந்த லஞ்ச தொகையை கொடுக்க விரும்பாத பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர், இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.24 ஆயிரத்தை அதிகாரி ராமுவிடம் கொடுப்பதற்காக அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அவரை வரச் சொன்னார்கள்.
அதன்படி அதிகாரி ராமு நேற்று இரவு ரூ.24 ஆயிரத்தை பெறுவதற்காக சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் பணத்தை பெறும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிகாரி ராமுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story