கெலமங்கலம், பர்கூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கெலமங்கலம், பர்கூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் வாசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருநாவுக்கரசு, கிருஷ்ணாச்சாரி, ராமன், அனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட தலைவர் சின்னப்பன், துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும். இவர்களுக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் நிர்வாகி ராஜன்னா நன்றி கூறினார்.

இதேபோல் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். செயலாளர் சக்கரபாணி வரவேற்று பேசினார். நிர்வாகிகள் லட்சுமி, ஜோதி, வனிதா, செல்வி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட இணை செயலாளர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு செலவு மானியத்தை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் லட்சுமி நன்றி கூறினார்.

Next Story