கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவி மீட்பு ஏற்காடு வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
ஜேடர்பாளையம் அருகே கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவி மீட்கப்பட்டார். அவரை கடத்தியதாக, தப்பி ஓடிய ஏற்காட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஜேடர்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த 26-ந் தேதி வழக்கம்போல பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு வரை வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவியின் தோழிகளின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனால் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசில் தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். இதன்பேரில், ஜேடர்பாளையம் போலீசார் பல்வேறு இடங்களில் மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவி வைத்திருந்த செல்போனின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், ஏற்காடு சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டு வந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை கடத்தியது ஏற்காடு கொலக்கூர் அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பது தெரியவந்தது.
மேலும், மாணவிக்கு விஜயகுமாரின் செல்போனில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக சென்ற அழைப்பின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், இதன் மூலம் மாணவியிடம் ஆசைார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பிஓடிய விஜயகுமார் மீது ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story