செம்பூர் - வடலா இடையே நாளை முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை
செம்பூர் - வடலா இடையே நாளை முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவித்து உள்ளது.
மும்பை,
செம்பூர் - வடலா இடையே நாளை முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவித்து உள்ளது.
நாளை முதல் சேவை
மும்பையில் கடந்த 2014-ம் ஆண்டு நாட்டிலேயே முதன்முறையாக மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோனோ ரெயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, மேனோ ரெயில் சேவை அடியோடு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 9 மாதமாகியும் இன்னும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், செம்பூர் - வடலா இடையே நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) அறிவித்து உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செம்பூர் - வடலா இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என மொத்தம் 130 சேவைகள் இயக்கப்பட உள்ளது.
மோட்டார் சைக்கிள் பேரணி
நாளை முதல் சேவை தொடங்க உள்ளதை அடுத்து நேற்று செம்பூர் - வடலா இடையே மோனோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மோனே ரெயில் சேவை தொடங்க உள்ளது அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே விரைவில் மோனோ ரெயில் சேவையை தொடங்க வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே நடந்தது.
Related Tags :
Next Story