எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்


எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:41 AM IST (Updated: 31 Aug 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே தண்ட வாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் மின்சார ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னை, 

சென்னை சேத்துப்பட்டு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 28). டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முனிவேல்(25). கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கிஷோர்குமாரும், முனிவேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே தண்டவாளத்தை கடந்து சாஸ்திரி நகருக்கு செல்ல முயன்றனர்.

ரெயில் மோதி 2 பேர் பலி

அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயில் கிஷோர்குமார், முனிவேல் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அதன்பின்னர் தான் எழும்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்து இருக்கிறது.

இந்த தகவலை தொடர்ந்து எழும்பூர் ரெயில்வே போலீசார் காலையில் சென்று 2 பேரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு முதல் காலை வரை தண்டவாளத்தின் ஓரத்திலேயே 2 பேரின் உடல் கிடந்து இருக்கிறது. இதுதொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story