நந்தூர்பரில் உதவி கலெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுங்கள் டி.ஜி.பி.க்கு, முதல்-மந்திரி உத்தரவு

நந்தூர்பரில் உதவி கலெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுங்கள் டி.ஜி.பி.க்கு, முதல்-மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

நந்தூர்பரில் உதவி கலெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை, 

நந்தூர்பரில் உதவி கலெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளார்.

உதவி கலெக்டர் மீது தாக்குதல்

நந்தூர்பர் மாவட்டம் டோட்லா பகுதியில் சமீபத்தில் மாணவர் ஒருவரின் உயிரிழப்பை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் விஜய் கவுடா சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் உதவி கலெக்டருடன் மோதலில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதில் உதவி கலெக்டர் விஜய் கவுடா காயம் அடைந்தார்.

முதல்-மந்திரி உத்தரவு

இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஒருங்கிணைந்த பழங்குடியின வளர்ச்சி திட்டம் குறித்து 18 சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கடமையை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு தனது முழு ஆதரவு என்றும் இருக்கும் என அவர்களிடம் முதல்-மந்திரி உறுதி அளித்தார்.

இதையடுத்து உதவி கலெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில டி.ஜி.பி.க்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

Next Story