பெண்ணை மானபங்கம் செய்து பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவம்

பெண்ணை மானபங்கம் செய்து பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:00 AM IST (Updated: 31 Aug 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

தாதா் ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்துவிட்டு பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

தாதா் ரெயில் நிலையத்தில் பெண்ணை மானபங்கம் செய்துவிட்டு பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் மானபங்கம்

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த 25 வயது பெண் சம்பவத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தாய் மற்றும் சகோதரியுடன் செம்பூர் வந்து இருந்தார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அவர் இரவு 9.45 மணியளவில் தாதர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் பெண்ணை மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனை கண்ட பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பெண் பயணிகள் அந்த நபரை கண்டித்தனர்.

கத்தியை காட்டி மிரட்டினார்

இதனால் ஆத்திரமடைந்த அவர் பெண் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டினார். அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தாராவியை சேர்ந்த வர்கீஸ் டிசோசா (வயது39) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story